(அ) காணாமற்போன ஆட்களைத் தேடிக்கண்டுபிடித்தலும் அதற்குத் தோதான வழிமுறைகளை அடையாளங் காணுதலும், அத்துடன்அத்தகைய ஆட்கள் எத்தகைய சூழ்நிலைகளில் காணாமற்போனார்களென்பதையும் அவர்களின் கதியையும் தெளிவுபடுத்துதலும்
(ஆ) இச்சட்டத்தின் பொருளுக்குட்பட காணாமற்போன ஆட்கள் பற்றிய சம்பவங்கள் பற்றி எடுத்துரைப்பதற்கு இயைபான அதிகாரிகளுக்கு விதப்புரைகளைச் செய்தல்
(இ) இச்சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறாக காணாமற் போன ஆட்களினதும் அவர்களின் உறவினர்களினதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாத்தல்
(ஈ) காணாமற்போன ஆட்களும் காணாமற்போன ஆட்களின் உறவினர்களும் எந்த நிவர்த்திக்கான வழிகளுக்கு உரித்துடையோராகவுள்ளனரோ அந்த வழிகளை அடை யாளம்காணுதலும், அதுபற்றி காணாமற்போன ஆளுக்கும் (உயிருடன் காணப்படின்) அத்தகைய காணாமற்போன ஆளின் உறவினருக்கும் அறிவித்தலும்
உ) தற்போது நிறைவேற்றப்படுகின்ற அல்லது வேறு நிறுவனங்களினால், ஒழுங்கமைப்புகளினால், அரசாங்கத் திணைக்களங்களினால், விசாரணை ஆணைக்குழுக் களினால் அத்துடன் விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களினால் முன்னர் நிறைவேற்றப்பட்ட நடைமுறைகள்மூலம் பெறப்பட்ட காணாமற்போன ஆட்களுடன் தொடர்புபட்ட தரவுகளை ஒன்றுதிரட்டு தலும், கிடைக்கக்கூடியவான எல்லாத் தரவுகளையும் இச்சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட தரவுத்தளத்தினுள் ஒருமுகப்படுத்துதலும்
(ஊ) இச்சட்டத்தின்கீழ் குறிக்கோள்களை எய்துவதற்கு அவசிய மான அத்தகைய வேறெல்லா அவசியமான செயல்களையும் செய்தல்.