காணப்படாமைக்கான சான்றிதழ் (CoA) என்பது இல்லாமையை நிரூபிப்பதற்கு சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணமாகும், காணாமல் போன அல்லது மறைந்து போன ஆட்களின் இல்லாமை நிலையை நிறுவ. ஆதாரமாக பயன்படுத்தப் படுகிறது. நலன்புரி சேவைகள் மற்றும் பிற நிர்வாக செயல்பாடு களுக்கான அணுகல் உட்பட, காணாமல் போன அல்லது மறைந்து போன ஆட்களின் உறவினருக்கு அவர் / அவள் சார்பாக சில சட்ட உரிமைகளைப் பயன்படுத்த இது உதவுகிறது, இது 2016 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத் தின் படி பதிவாளர் நாயகத்தால் வழங்கப்படுகிறது. OMP வழங்கிய இடைக்கால அறிக்கையின் அடிப் படையில் பதிவாளர் நாயகத்தால் ஒரு இல்லாமை பற்றிய சான்றிதழை வழங்க முடியும். சட்டத்தின்படி, ஒரு. காணப்படாமைக்கான சான்றிதழ் இரண்டு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கக்கூடியது. ஒரு. காணப்படாமைக்கான சான்றிதழைப் பெறுவது, காணாமல் போன அல்லது காணாமலாக்கப்பட்ட ஒரு ஆள் இருக்கும் இடத்தைப் பற்றிய எந்தவொரு விசாரணையையும் தடுக்கவோ அல்லது நிறுத்தவோ இல்லை. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2020 இன் தொடக்கத்தில் இடைக்கால அறிக்கைகளுக்கான விண்ணப் பங்களை செயலாக்கத் தொடங்கி யது. இந்த காலகட்டத்தில் 2020 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் விசார ணைகள் நடத்தப்பட்டு 54 இடைக்கால அறிக்கைகளை வெளியிட்டது. விசாரணைகளை நடத்துவதற்கான செயல்முறை கொவிட் (COIVD)-19 தொற்று நோயால் கடுமையாக தடைப் பட்டது. இருப்பினும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் இடைக்கால அறிக்கை விண்ணப்பங்களை தொடர்ந்து செயலாக்குகிறது.