காணாமல் போன ஆட்கள்பற்றிய அலுவலகம்( ழுஆP ) தனது 6வது பிராந்திய அலுவலகத்தை 2021 ஆவணி மாதம் 12ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. தற்போது காணாமல் போன ஆட்கள்பற்றிய அலுவலகமானது மாத்தறை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் மன்னாரில் பிராந்திய அலுவலகங்களை கொண்டுள்ளது. இலங்கை காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களது கதியையும் அவர்கள் எங்கிருக்கிள்றனர் என்பதை அறிந்துகொள்வதையும் தனது பிரதான பணிப்பாணையாக கா.போ.ஆ பற்றிய அலுவலகம் கொண்டுள்ளது. இவ் பிராந்திய அலுவலகமானது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கா.போ.ஆ பற்றிய அலுவகத்தை இலகுவாக அணுகுவதற்கு ஆகும். கா.போ.ஆ பிராந்திய அலுவலகமானது குடும்ப உறுப்பினர்கள் சமர்பிக்கும் முறைப்பாடுகளை ஏற்றுகொள்வது உட்பட குடும்ப உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக அரச அலுவலகங்களில் நிர்வாகம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பின்தொடர்வதுடன் தனிப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதுமான பலதரப்பட்ட சேவைகளை வழங்கும். இவ்வாறு கா.போ.ஆ பற்றிய அலுவலகமானது தொடர்ந்து தன் அலுவலகங்களை நிறுவி பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளை பாதுகாப்பதில் முழுமுயற்சியுடன் செயற்பட்டு காணாமல்போன காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் அவர்களின் குடும்பத்தினரதும் உரிமைகளை பாதுகாத்தும் தனது பணிப்பானையை நிறைவேற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.