காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவுதல்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுவதற்கான மசோதா 2016 ஜூன் 22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு. மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (நிறுவுதல், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுதல்) 2016 இன் 14ம் இலக்க சட்டம், 2016 ஆகஸ்ட்11 ம் திகதி அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 பிப்ரவரி 28 அன்று, திரு. சாலிய பீரிஸை ஜ. ஆ. தலைவராகக் கொண்ட ஏழு ஆணையர் களை நியமித்ததன் மூலம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை செயல்படுத்தினார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவுதல் காணாமல் போன ஆட்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக் கிறது. அடுத்தடுத்த அரசாங்கங்கள் காணாமல் போன ஆட்களை பற்றி விசாரிப்பதற்கான விசாரணைக் குழுக் களை நியமித்து அல்லது வரையறுக் கப்பட்ட வழிமுறைகளுடன் தற்காலிக வழிமுறைகள் உட்பட பல நடவடி க்கைகள் எடுத்தும் பரிந்துரைகளின் வழியில் முக்கியமான பங்களிப்பு களைச் செய்தும், இந்த முந்தைய வழிமுறைகள் மூலம் தங்கள் அன்புக் குரியவர்களைத் தேடும் பல ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு பதில் களை வழங்க முடியவில்லை.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிரந்தரமானதும் மற்றும் சுயாதீனமான அரச நிறுவனமாக, மோதல் தொடர்பாக அல்லது அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு இடையூறுகள் அல்லது கட்டாயமாக காணாமல் போனதன் விளைவாக காணாமல் போன அல்லது காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் இருப்பிடத்தை தெளிவு படுத்துவதற்கு பொறுப்பாகும்.

Timeline of Establishment

2016
2016-06-22

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

2016-08-16

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

2016-09-16

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் செயல்படும் வர்த்தமானி வெளியிடப்பட்டது

2017
2017-10-24

அரசியலமைப்பு சபை விண்ணப்பதாரர்களை அழை த்தது

2018-02-28

ஜனாதிபதியால் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக ஆணையர் சபை நியமனம்

2025-04-11

sdsdsd

2025
2025-04-11

sss